

அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் இருந்து வி.கைகாட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள விநாயக கல்வி நிறுவனம் அருகே 10 ஆண்டுகால அரசு மரம் ஒன்று இருந்தது.அந்த மரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக நெடுஞ்சாலைதுறையினரால் வெட்டப்பட்டு இருந்தது. இதனை அறிந்த சோலைவனம் அமைப்பினர் 10 ஆண்டுகால அரச மரத்தை காக்கும் நோக்கத்தோடு வேருடன் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றி நடுவதற்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் த.ரத்னா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.இதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் அ வழி நடத்தலின்படி சோலைவனம் அமைப்பினர் 10 ஆண்டுகால மரத்தினை ஜேசிபி மற்றும் கிரைன் எந்திரத்தின் உதவியுடன் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றி வைத்து மறு உயிர் அளித்தனர். இந்நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.மேலும் அரியலூர் பகுதிகளில் பசுமையை மீட்டெடுத்த சோலைவனம் அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டி வரு
கின்றனர்.உடன் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் இருந்தார்.
.