விருதுநகர் : சாத்தூர் :
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில்
கொரோனா தொற்று எண்னிக்கை தினசரி கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றால் சாத்தூர் நகர் பகுதியில் நான்கு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம்
அறிவித்து அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவணங்கள் செயல்பட முழுமையாக
தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல்
நகர் பகுதியில் உள்ள நான்கு தேசியமையம்மாக்கபட்ட வங்கி கிளைகளில் பணிபுரியும் மேலாளர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் வங்கிகள்
மூடபட்டுள்ளது. நேற்று சாத்தூர் பகுதியில்
32 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது அதில் சாத்தூர்
நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர்கள் பிரேமா (36) முருகேஸ்வரி (40) ஆண் காவலர்கள் சுவாமிநாதன் (48) முத்துராஜா (33) முருகன் (51) ராமதாஸ் (49) ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று, பரிசோதனையில் உறுதியானதால் ஆறு காவலர்கள் சிகிச்சைக்கு சாத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
இன்று சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.இன்று முதல்
நான்கு நாட்களுக்கு காவல் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக
சாத்தூர் நகர் காவல் நிலையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.