திருமங்கலம் அருகே ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள காவல் நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை மாவட்ட எஸ்பி தொடங்கி வைத்தார்

292

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலைய கட்டிடத்திற்கான பூமிபூஜை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தொடங்கி வைத்தார் இதில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்

திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் கூத்தியார்குண்டு நான்குவழிச் சாலையில் இருந்து ஏறக்குறைய காட்டுப்பகுதியில் மூன்று கிலோமீட்டர் தூரம் தொலைவில் உள்ளது இதனால் பொதுமக்கள் புகார் கொடுக்க நீண்ட தூரம் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இரவு நேரங்களில் காவல் நிலையம் சென்று வருவது மிகவும் கடினமான காரியம் மேலும் காவல் நிலையம் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் கிடையாது ஆதலால் கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலை பகுதியிலேயே ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது அதனடிப்படையில் திருமங்கலம் அருகே தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட 32 சென்ட் இடத்தில் புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டது பின்னர் ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது அதனடிப்படையில் இன்று தோப்பூர் நாடக மேடை அருகே வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் இடத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீட்டுவசதி துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here