
திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பிரச்சனையே உடனடியாக அணுக “ரேஸ்” என்னும் குழுக்கள் அமைக்கப்பட்டு,அதனையோட்டி
அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் கொடியசைத்து அச்சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:
காவல் அதிகாரிகளுக்கு வரும் புகார்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குற்ற சம்பவங்கள் பற்றி பொதுமக்களிடம் இருந்து வரும் தகவல்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், புகார் மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடம் செல்ல ஏதுவாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு “ரேஸ் குழு”அமைக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரியும் வகையில் ரேஸ் (RACE- Rapid Action For community Emergency) குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.



