
கோவை
மத்திய அரசு தர சான்றிதழ் பெற்ற தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது.
காவலர் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் வேலை செய்து வந்த காவலர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஒரு காவலருக்கு நோய்த்தொற்று இருந்ததை தொடர்ந்து ,தொண்டாமுத்தூர் காவலர்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 36 காவலர்களுக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவு இன்று தெரியவந்த நிலையில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த ஒரு பெண் ஒருவருக்கும், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ் பி சி ஐ டி ஒருவருக்கும் நோய்த்தற்று உறுதியானது.
அதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் காவல்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரிவினரை சேர்ந்த அனைவருக்கும் கபசுர குடிநீர் கொடுத்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
மத்திய அரசு தரச்சான்று பெற்ற தமிழகத்தின் முதல் காவல் நிலையமான தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதியானதும், மேலும் 6வது காவல்நிலையமாக நோய் தொற்று பாதிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டத்தினால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
