அரியலூர் மாவட்ட திருமானூரில் காவல்துறையினர் லயன்ஸ் கிளப் சங்கத்தினர் இணைந்து பொதுமக்களுக்கு நல உதவி மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கல்

163

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காவல்துறையினர் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து இன்று ஆதரவற்றோர்,முதியோர் மற்றும் தூய்மை பணியாளர் உள்ளிட்டோருக்கு அரிசி பைகள், வேட்டி சேலை முதலிய நல உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் மக்களிடையே கொரோனா குறித்தும் ,முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here