Home தமிழ்நாடு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கே என் குப்பம் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தந்தையை அடித்துக் கொன்றதால் குண்டர் சட்டத்தில் கைது::மாவட்ட ஆட்சியர் ரத்னா நடவடிக்கை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கே என் குப்பம் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தந்தையை அடித்துக் கொன்றதால் குண்டர் சட்டத்தில் கைது::மாவட்ட ஆட்சியர் ரத்னா நடவடிக்கை

0
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கே என் குப்பம் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தந்தையை அடித்துக் கொன்றதால் குண்டர் சட்டத்தில் கைது::மாவட்ட ஆட்சியர் ரத்னா நடவடிக்கை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் , K.N .குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சக்கரவர்த்தியின் மூன்றாவது மகனான கலியமூர்த்தி (36) என்பவர் வெளிநாடு சென்று சம்பாதித்து பணம் முழுவதும் தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார். கலியமூர்த்தி வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னர், தான் அனுப்பிய பணம் அனைத்தையும் தனது அண்ணனின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தியதாலும், தனது கல்யாணத்திற்கு என அனுப்பிய பணத்தை செலவு செய்த காரணத்தினாலும் தனது தந்தை சக்கரவர்த்தியிடம் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் 30/6/2020 அன்று கலியமூர்த்தி குடிபோதையில் தனது தந்தையை தகாத வார்த்தையில் திட்டி மண்வெட்டி கழியால் தனது தந்தையின் தலையில் பல முறை அடித்துள்ளார். சம்பவ இடத்திலேயே சக்கரவர்த்தி உயிர் இழந்தார். கலியமூர்த்தியின் அண்ணன் ஐயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளர் முஹம்மது இத்ரீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளி கலியமூர்த்தியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்.இந்த பதட்டமான சூழ்நிலையில் கலியமூர்த்தி வெளியே இருந்தால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் சண்டை வர வாய்ப்பு இருந்ததாலும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் கலியமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆய்வாளர் முஹம்மது இத்ரீஸ் , ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மோகனதாஸ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் பரிந்துரை செய்தனர். அப்பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குற்றவாளி கலியமூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் கலியமூர்த்தியை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் 21/07/2020 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here