


அரியலூர் மாவட்டம் கீழசிந்தாமணியை சேர்ந்தவர்மணிவண்ணன்(53) , இவர் அரியலூர் மாவட்டம் துத்தூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 19/6/2020 அன்று துத்தூர் காவல் நிலைய அலுவலராக இருந்த போது துத்தூர் புதுத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சின்னத்தம்பி அளித்த புகாரின் அடிப்படையில் தூத்தூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சந்திரசேகர் த/பெ விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்தார். ஆனால் எதிரி சந்திரசேகர் முன்ஜாமீன் பெற்று தன் மீது வழக்கு பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன்் துத்தூர்–முத்துவாஞ்சேரி சாலையில் வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்த போது சிறப்பு உதவி காவல்துறை ஆய்வாளரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து, வழிமறித்தனர் . உடனே சந்திரசேகர் அவரது நண்பர்கள் சதீஷ் குமார்(31) த/பெ சக்கரவர்த்தி மற்றும் ராம்கி த/பெ ரமேஷ் ஆகியோர்களுடன் சேர்ந்து குடிபோதையில் சிறப்பு உதவி ஆய்வாளர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தலையில் பலத்த காயத்துடன் அவர்களிடமிருந்து தப்பித்து விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடையார்பாளையம் வட்ட காவல் ஆய்வாளர் சிவகுமார் மூவர் மீதும் விசாரணை செய்து வழக்கு தொடர்ந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலில் அடைத்தார். இதனையடுத்து குற்றவாளி சந்திரசேகர் மற்றும் ராம்கி வெளியே இருந்தால் மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள், அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என்ற காரணத்தினால் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க காவல் ஆய்வாளர் சிவக்குமார் , ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மோகனதாஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ரத்னா குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் சந்திரசேகர் மற்றும் ராம்கி அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் 21/07/2020 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.