அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் கொரோனா வைரஸ் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்.

265

அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில்
மாவட்ட காவல்துறை‌‌ கண்காணிப்
பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் முன்னிலையிலும் இன்று கொரோனா வைரஸ் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கூறியதாவது:
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் சூழலில் அனைத்து ஓட்டுநர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனிமனித சுத்தத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பணியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாகனங்கள் இயக்கிய பின்பு முறையாக ஓய்வு எடுக்க வேண்டும். கைகழுவ இயலாத இடங்களில் sanitizer மூலம் கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஓட்டுனர்கள் ஓட்டுநருக்கான உடையினை நன்கு சுத்தம் செய்து தூய்மையாக அணிந்து கொள்ள வேண்டும். வாகனங்கள் முறையாக sanitizing செய்து வாகனங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

சுரங்கப் பகுதியில் பணிபுரிபவர்களின் நலன் கருதி விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ் மற்றும் Road worthy certificate இருத்தல் அவசியம். வாகனங்களில் முகப்பு விளக்குகள் சமிக்கை விளக்குகள் ஒலி எழுப்பான்கள் முறையாக பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கனரக வாகனங்களின் பெயர் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாக தெரிய வேண்டும். கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயக்க வேண்டும். மீறும் ஓட்டுநர்கள் மீதும் ,நிர்வாகத்தின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கி நல்ல தகுதியான நபர்களை பணியில் அமர்த்த வேண்டும். ஓட்டுநர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து இருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக ஒளிரும் பட்டை ஒட்டி இருக்க வேண்டும்.வாகனங்களில் கண்கூசும் விளக்குகளை பயன்படுத்த கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது கண்டிப்பாக ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது மீறும் பட்சத்தில் ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
என கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வட்டாரபோக்கு
வரத்து அலுவலர் வெங்கடேசன்,
சிமெண்ட் ஆலை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்,ஆகியோர் கலந்து கொண்டு எழுந்து நின்று அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற துணை நிற்போம் என்று உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.
அரியலூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் மற்றும் ஜெயங்கொண்டம் நகரபோக்கு
வரத்து ஆய்வாளர் ஆனந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here