
கரூர் – 21.07.2020
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் அவர்களின் உத்தரவின்படி 21.07.2020 இன்று கரூர் சுங்ககேட் பகுதியில் முக கவசம் அணியாமல் வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பொன்ராஜ் அவர்கள் தலைமையில் முகக்கவசம் வழங்கப்பட்டது.மேலும் முக கவசம் அணியாமல் மீண்டும் வந்தால் கட்டாயமாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும், கொரோனவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.


