ஆந்திராவில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

186

ஆந்திராவில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், போலீசாரால் தாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரகாசம் மாவட்டத்தில் சீராளா என்ற பகுதியில் கடந்த 18ஆம் தேதி கிரண்குமார் என்ற இளைஞர், முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகக்கவசம் அணியாதது குறித்து கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் தலையில் காயமடைந்த இளைஞர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே போலீசாரை கண்டித்து போராட்டம் வெடித்த நிலையில், ஆந்திர அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சீராளா காவல் நிலைய எஸ்ஐ விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here