


தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்தில்நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் சீமான் இன்று மயிலாடுதுறை அவரது சகோதரர் மகன் இல்லத்தில் கடத்தல் கும்பல் விட்டுச் சென்றுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுறத்தில் சுமார் 10 ஆண்டு காலமாக நகைக்கடை வைத்திருப்பவர் சீமான். (56)இவர் நேற்று வழக்கம் போல் ஊரணிபுரம் ஆற்றங்கரையில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் திருவோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட திருவோணம் காவல்துறையினர். நடைப்பயிற்சியில் ஈடுபட்டு கொண்ட சீமான் தவறி ஆற்றில் விழுந்து இருக்கலாம்? என்ற கோணத்தில் ஒரத்தநாடு தீயணைப்பு துறையினர் மூலம் ஆறு முழுவதும் தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சீமான் மைத்துனர் ராஜா என்பவருக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசிய சீமான் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவதாகவும் நீங்கள் கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது அலைபேசியில் பேசிய மற்றொரு நபர் நாங்கள் கேட்ட தொகை ரெடி செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார். மறுபுறம் பேசிய ராஜா சீமானை பேச சொல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த திருவோணம் போலீசார் இந்த வழக்கை கடத்தல் வழக்காக பதிவு செய்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேசக் முக் சேகர் சஞ்சய் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள சீமானின் சகோதரர் ராமச்சந்திரன் மகன் இல்லத்தில் கடத்தல் கும்பல் சீமானை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த திருவோணம் போலீசார் இன்ஸ்பெக்டர் சுமத்திரை தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.