தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாணவனை தாக்கி கையாலே மலம் அள்ள வைத்த நபர் கைது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடி அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கடந்த 15ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அதைப்பார்த்த ராஜசேகர் என்பவர் ஜாதி பெயரை கூறி மாணவனை ஆபாசமாக திட்டி கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது கையாலேயே மலத்தை அள்ளிச் சென்று வேறு ஒரு இடத்தில் வீசும்படி செய்துள்ளார். இது குறித்து மாணவனின் பெற்றோர் பெண்ணாகரம் டிஎஸ்பி மேகலாவிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து இச்சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிஐ ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் மாணவனை மலம் அல்ல வைத்தது தொடர்பாக பெண்ணாகரம் போலீஸார் எஸ்சி எஸ்டி பிரிவில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜசேகரை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.