தாராபுரத்தில் நடைபயிற்சி சென்ற இந்து முன்னணி பிரமுகர் வேன் மோதி பலி

156

தாராபுரத்தில் நடைபயிற்சி சென்ற இந்து முன்னணி பிரமுகர் வேன் மோதி பலி

தாராபுரம்_ஜூலை:-22
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபயிற்சி சென்ற இந்து முன்னணி பிரமுகர் வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தார். தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் வயது (54) இவர் இந்து முன்னணியின் தாராபுரம் நகர அவைத் தலைவராகவும் உள்ளார். இன்று காலை நடைப்பயிற்சி செல்வதற்காக கோவை தாராபுரம் புறவழிச் சாலைக்கு சென்றார் அங்கு அவர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது எதிரே வந்த சரக்கு வேன் பாலசுப்பிரமணி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here