திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி மற்றும் திட்டக்குடியை சேர்ந்த 7 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

226

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24 தேதி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்து 6 ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வராமல் பாதுகாக்க காவலர்கள் முழு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகல் பாராமல் பணி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலக எழுத்தர் தலைமைக் காவலர் மற்றும் துணை கண்காணிப்பாளரின் அதிவிரைவு படையை சேர்ந்த 4 போலீசாருக்கும், ஆவினங்குடி காவல்நிலையத்தில் ஒரு காவலர் உட்பட திட்டக்குடி தாலுகாவில் 8 காவலர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திட்டக்குடியில் உள்ள போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. போலீஸ் டிஎஸ்பி பயன்படுத்திய அரசு வாகனம் அவரது அறை குடியிருப்பு வளாகம், திட்டக்குடி காவல் நிலையத்திலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அவரை தனிமை படுத்தப்பட்டார். மற்ற போலீசார் அனைவரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here