திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது.
இப்பதிவை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் தாடிக்கொம்பு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லிடியா செல்வி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சேக் தாவூத் அவர்கள் கலந்து கொண்டனர்.


