திருவண்ணாமலை
22.07.2020
கண்காணிப்பு கேமராவுக்கு மாட்டு சாணம் பூசி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள், பணத்தை எடுக்க முடியாததால் தப்பி ஓட்டம்…..
கொள்ளை சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை….
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் அருகில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ATM-ல், நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து கண்காணிப்பு கேமராவில் மாட்டு சாணத்தை பூசி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் உடைத்த ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியுள்ளது.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை செய்தனர்.
மேலும் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.