
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, வெளி
மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து, மினிபஸ், மேக்ஸி கேப்,
டூரிஸ்ட் டாக்ஸி உள்ளிட்ட எவ்வித பயணிகள் வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்ற
பின்னரே இயக்க வேண்டும். இ-பாஸ் பெறாமல் இயக்கி பயணிகளுடன் மாவட்ட
எல்லை சோதனை சாவடிகளில் பிடிபட்டால் வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைச் சட்டத்தின் படி வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு
தொடரப்படும். மேலும் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் மீது வட்டார
போக்குவரத்து துறையின் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பு.