
புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி அருகே போசம்பட்டி யில் நேற்று இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போசம்பட்டி யில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க்க புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணிக்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு.