மதுரை அருகே டூவிலரில் லாரி மோதி பெண் போலீஸ் பலி

395

மதுரை அருகே டூவிலரில் லாரி மோதி பெண் போலீஸ் பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரத்தில் டூவிலரில் பணி முடித்து வீட்டுக்கு திரும்பிய பெண் போலீஸ் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகாயினி (வயது28) இவர் மதுரையில் சிறப்பு காவல் 6 வது பட்டாலியனில் போலீஸாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் ஆனந்தராஜ் வயது 38 சென்னையில் காவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், கார்த்திகாயினி இன்று பணிக்கு மதுரைக்கு சென்று விட்டு, டூட்டி முடிந்து மீண்டும் கல்லனையில் உள்ள வீட்டிற்கு டுவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அலங்காநல்லூர் அருகே குமாரம் ஸ்டேட் பாங்க் அருகே அவர் வரும்போது, அவ்வழியாக வந்த லாரி மோதி கார்த்திகாயினி சம்பவ இடத்திலேயே அடிபட்டு இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here