வேப்பூர் அருகே கணவன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

220

வேப்பூர் அருகே கணவன் மனைவியை தாக்கியவர் வாலிபரை போலிசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடியை சேர்ந்தவர் முனியன் மனைவி சந்திரா (வயது 45), இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயவன் மகன் ஆறுமுகம் என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது,

இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் சந்திரா வீட்டின் அருகே ஆறுமுகம் தரப்பு வீட்டிற்கு மாடி படி கட்டும் பணியை செய்து வருகிறார் இதற்கு கோர்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என சந்திரா கேட்டதற்கு அருகில் இருந்த சுப்ரமணியன் இரும்பு கம்பியை எடுத்து சந்திரா, அவரது கணவர் முனியன் ஆகியோரை தாக்கியுள்ளார், இதில் காயமடைந்த சந்திரா வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுப்ரமணியன், மாரிமுத்தாள், சரோஜா, சாரதா, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்தனர், மற்றவர்களை தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here