சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

287

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் சமயபுரம் காவல் நிலையம் முன்பு வைத்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, காவல் நிலையம் முன்பு மாலை 6.30 மணிக்கு நடந்த இந்த சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த விக்கியை அங்கிருந்த சிலர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் , அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் தங்கமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here