Home தமிழ்நாடு சாத்தான்குளம் வழக்கு… சி.பி.சி.ஐ.டி. அலுவகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசிட்!

சாத்தான்குளம் வழக்கு… சி.பி.சி.ஐ.டி. அலுவகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசிட்!

0
சாத்தான்குளம் வழக்கு… சி.பி.சி.ஐ.டி. அலுவகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசிட்!

சாத்தான்குளம் வழக்கு… சி.பி.சி.ஐ.டி. அலுவகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசிட்!*

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலைவழக்கு தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குவருகை தந்து அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர்.அதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்தனர். முதற்கட்டமாக 5 காவலர்களும், இரண்டாம் கட்டமாக 3 காவலர்களும் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுவிசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து கூடுதல் எஸ்.பி. சுக்லா தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குதிடீர் வருகை தந்துள்ளனர்.

வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here