

பெரியகுளம் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முககவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா நோய் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் முக கவசம் இன்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு பெரியகுளம் தென்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் திரு. மாரிமுத்து அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.