
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திராவிட நல்லூரை சேர்ந்த 7 வயது சிறுவன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் ராஜேந்திரபட்டினத்திற்கு தனது அம்மாவுடன் ,அம்மாவின் தாயார்(பாட்டி) வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சிறுவன் தனியாகவே யாரிடமும் சொல்லாமல் திராவிடநல்லூர் நோக்கி நடந்து வந்துள்ளான். பெரியாத்துக்குறிச்சி சோதனைச்சாவடி அருகே வழி தெரியாமல் தவித்து நின்ற சிறுவனை காவலர் அய்யப்பன் அழைத்து விசாரித்து, சிறுவனின் சொந்த ஊரான திராவிடநல்லூரில் அவனது பாட்டியிடம் ஒப்படைத்தார். தனது பேரனை
பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தமைக்கு பாட்டி மற்றும் பொதுமக்கள் காவல்துறை
யினருக்கு நன்றி தெரிவித்தார்…
