Home COVID-19 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி-இதுவரை 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கும் கொரோனோ தொற்று உறுதி…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி-இதுவரை 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கும் கொரோனோ தொற்று உறுதி…

0
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி-இதுவரை 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கும் கொரோனோ தொற்று உறுதி…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்வதற்காக டெல்லியிலிருந்து ஏ எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு கடந்த 10ஆம் தேதி வருகை புரிந்தனர்.

மதுரை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளில் ஏற்கனவே இரண்டு பேருக்கு நேற்று முன்தினம் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்று மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 14ம் தேதி மதுரை மத்திய சிறைச்சாலையிலடைக்க்கப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துறைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது விசாரணையில் தொய்வு ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here