



கொரோனா ரைவஸ் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3வது மைலில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் உள்ளவர்கள்தான் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு கொரோனா ரைவஸ் தொற்று சம்மந்தமாக மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிப்பதற்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து இன்று (24.07.2020) காலை தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் கொரொனா ரைவஸ் தொற்றை கண்டறியும் பொருட்டு மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விழிப்புணர்வு உறையாற்றி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் : அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், அதே போன்று கையுறை அணியவேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போன்றவற்றால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின் அங்குள்ள காவலர்களுக்கு மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.
இந்த மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகர் நல அலுவலர் அருண், மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டாலின் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்தவ அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைமையில் மருத்துவ பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இன்று மட்டும் சுமார் 150 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வக்குமார், ஆயுதப்படை பெண் காவலர்கள், ஆண் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.