
மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ் 18 இமெயில் மோசடியானது என ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், தற்போது நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளனர்.
மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.