
பல்லாவரத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக ஒரு கும்பல் பட்டப் பகலில் வீடு புகுந்து, செல்போனை திருடிச் செல்வதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு வாலிபர்கள் செல்போன்களை திருடிக் கொண்டு செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் இருவரும் திரிசூலம், முனீஸ்வரன் மேட்டுத் தெருவை சேர்ந்த மணி(எ) மணிகண்டன் (24) மற்றும் செல்வராஜ் (26) என்பது தெரிய வந்தது. நேற்று திரிசூலம் மலையில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, பத்துக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.