பாலியல் வன்கொடுமையில் பலியான ஏம்பல் 7 வயது சிறுமி குடும்பத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ 16 லட்சத்தை ஒரு தரப்பினர் அபகரித்து விட்டதாகவும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தந்தை நாகூரான் புகார்.

430

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அவரது குடும்பத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட நிதியினை ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு தங்கள் குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என்றும் இதுகுறித்து கேட்டால் தன்னை கொலை செய்து விடுவதாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மிரட்டுவதாகவும் அவர்களுக்கு பயந்து தான் ஊரைவிட்டு ஒளிந்து வாழ்வதாகவும் தனதுகுடும்பத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சியினர் வழங்கிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவதோடு தனது உயிருக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி உயிரிழந்த சிறுமியின் தந்தை நாகூரான் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அங்கு இல்லாததால் புகார் மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here