
வந்தவாசி வட்டம், தேசூர் காவல் நிலையத்தில். மக்களுக்கு பாதுகாப்பு பணி முடிந்த பிறகு இரவு நேர காவல் பணியில் இருந்த அதிகாரிகள்,அப்போது இரவு 10.30 மணியளவில் ஒரு பெண் அழுத குரலுடன் வருகிறார்.அவரை சமாதானப் படுத்தி விசாரிக்கையில், அவருடைய கணவர் தேசூரில் அடகுகடை நடத்தி வருகிறார். எப்பொழுதும் போல, இன்று வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை மேலும் விசாரிக்கையில் தொலைபேசி மூலம் ஒரு நபரிடம் ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து அனுப்ப கூறியிருக்கிறார்.
மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை அவர் நண்பரிடம் விசாரிக்கையில் தொலைபேசி மூலம் பேசி ரூபாய் 1.5 லட்சம் பெற்று சென்றார். மேலும் அவருக்கு எதிரிகள் யாருமில்லை என்று விசாரணையில் தெரியவருகிறது. பின்னர் வழக்கு பதியப்பட்டு. மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. 40 காவலர்கள் சுற்றளவு 5 கி.மீ. புலத்தணிக்கை செய்ததில் அவரை பற்றி, அவரது வாகனம் பற்றி எந்த தகவலும் இல்லை.
மூன்றாம் நாள் தனிபடைக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஒரு பேக்கரியில்
இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்த போது ஒரு கார் வந்து போவது தெரிகிறது, காரின் நம்பர் தெரியவில்லை காரின் நிறம் மட்டும் தெரிகிறது.
தனிப்படை விடா முயற்சியால் சுற்றி உள்ள அனைத்து CCTV கேமரா ஆய்வு செய்தனர். பின்பு 1 கி.மீ. கடந்து அடுத்த CCTV கேமராவில் காரின் ஒரு பகுதியும், மறு கேமராவில் காரின் நம்பர் பலகை இல்லாதது தெரியவருகிறது.
மேலும் அந்த வழியில் சுமார் 20 கி.மீ. வரை அனைத்து CCTV கேமரா ஆய்வு செய்கையில் குறிப்பாக தெள்ளார் காவல் ஆய்வாளர் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் பொருத்தப்பட்டு இருந்த CCTV கேமராவில் குற்றவாளிக்கு உதவிய நண்பர்களின் வீடியோ ஆதாரம் கிடைத்தது.
கடுமையான தேடுதல் பணி மேற்கொண்ட தனிப்படையினர் 4 குற்றவாளிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்ட போது நகைக்கடை உரிமையாளரை கடத்தி,நகைகடையை கொள்ளை அடித்து (265 கிராம் தங்கம்,1150 கிராம் வெள்ளி மற்றும் ரொக்க பணம் ரூ.3,90,000),அவரை கொலை செய்து புதைத்தனர். மேலும் புதைத்த இடத்தில் இருந்து அவர் பிணமாக மீட்கப்பட்டர்.
குற்றவாளிகளிடம் இருந்து கொள்ளை அடித்த பொருள், பணம் மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப பட்டனர். வழக்கில் CCTV கேமரா பதிவை சிறப்பாக ஆராய்ந்து பணிபுரிந்த தலைமை காவலர் 646 திரு. தட்சணாமூர்த்தி , த. கா.700 திரு.முருகன் மற்றும் மு.நி. கா.1108 திரு.ஏழுமலை ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் வந்தவாசி DSP
பி. தங்கராமன் அவர்களும் பாராட்டினர்.