
கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட எல்லையான மடப்பட்டு பகுதியில் திருநாவலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி இருவர் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர் இதில் தாயும் அவரது கையிலிருந்த கைக் குழந்தையும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தாய்க்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக குழந்தை காயமின்றி உயிர் தப்பியது எனினும் அதிர்ச்சியில் உறைந்த அந்த குழந்தை கண்கள் நிலைத்து காணப்பட்டது, இதற்கிடையே அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி சங்கர் அவர்கள் விபத்தில் காயம் அடைந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டு கார் மூலம் அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார், இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் செய்தியாளர் ஐயப்பன் உளுந்தூர்பேட்டை
