வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்திலுள்ள, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகளிடம் மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுவிழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

