கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை பிரிவு காவலரை மலர் தூவி , இசை முழக்கத்துடன் வரவேற்ற அரியலூர்‌மாவட்டகாவல்துறை
கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன்

315

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலர் பிரபாகரன் (வாகனம் பிரிவு) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரியலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரகாலமாகதனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று பூரண குணமடைந்து குடியிருப்புக்கு திரும்பிய காவலரை அரியலூர் மாவட்ட காவலர்கள், காவலர் குடும்பங்கள் அனைவரும் பூ தூவி, இசை முழக்கத்துடன் வரவேற்றனர். மாவட்ட காவல்துறை கண்
காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் பூங்கொத்து, பழக்கூடை கொடுத்து காவலரை வரவேற்றார். உடன் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன் , ஆயுதப் படை ஆய்வாளர்செந்தில்குமரன் ஆகியோர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here