
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கடந்த 01.07.2020 அன்று நாமக்கல் மாவட்டக் காவல் துறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 10.07.2020 அன்று குணமாகி வீட்டுத் தனிமையில் 14 நாட்கள் இருந்து வந்தவர் இன்று 25.07.2020 ம் தேதி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து பணிக்கு அறிக்கை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. சி.சக்தி கணேசன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அவரை பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. தினேஷ் மற்றும் காவல் ஆளினர்கள் மலர் தூவியும், பூங்கொத்து கொடுத்தும் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
