Home தமிழ்நாடு கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0
கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில் கடந்த 16-ம் தேதி அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (37), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சி காந்தி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26), திருநெல்வேலி கொக்கிரகுளம் மேலநத்தத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேந்தர் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதில் குமுளி ராஜ்குமார் கடலூர் சிறையிலும், வினோத், சுரேந்தர் ஆகியோர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர் சுதர்சன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ,மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பரிந்துரைத்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதற்கான ஆணையை சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here