தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(ஜூலை.25) சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இஆபெ பார்வையிட்டார்.

221

அப்போது அதிராம்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து இமாம் ஷாஃபி பள்ளியில் தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் இருக்கிறதா ? என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இஆபெ பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பட்டுகோட்டை வட்டாட்சியர், டிஎஸ்பி, பேரூராட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பள்ளியை முழுமையாக பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்த பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உறுதியளித்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here