
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இடையர் தெருவை சேர்ந்தவர் மருதன் மகன் ரெங்கசாமி (வயது-43) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது ஒப்பொழுது ரெங்கசாமியை மருதமுத்து மற்றும் அவரது மனைவி வெள்ளையம்மாள் மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டையால் தலையில் பலமாக தாக்கினர் இதில் படுகாயம் அடைந்த ரெங்கசாமி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து மருதமுத்து (54) வெள்ளையம்மாள் (47)
மணிகன்டன் (23) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.