பெண் குழந்தைகள் மீது அக்கறை கொண்ட தாராபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாமணி

159

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியக்கூடியவர் வனிதாமணி அவர்கள்.இவர் தாராபுரத்தில் மகளிர் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய மகளிருக்கு எதிரான குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தி வருகிறார் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இருந்து வருகிறார் இன்று தாராபுரம் அருகே உள்ள சீராம்பாளையம் என்ற பகுதியில் பொதுமக்களை நேரில் அழைத்து பெண் குழந்தை வளர்ப்பது பற்றியும் குழந்தைக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது அதை பெற்றோர்கள் எப்படி கையாள்வது போன்ற அறிவுரைகளை காவல் ஆய்வாளர் வனிதாமணி அவர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்..

தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here