
டேவிட் தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உதவி ஆய்வாளர் திருமதி.சிவ சங்கரி அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(54) S/O கருப்பையா மற்றும் மணிகண்டன்(23) s/o கனி என்ற நபர்களையும், இதேபோல் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் அருகே மாரிக்குமார்(45)
S/O லக்ஷ்மணன் என்ற நபரை உதவி ஆய்வாளர் திரு.ஜனார்த்தனன் அவர்களும்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து(50) S/o பெருமாள் என்ற நபரை உதவி ஆய்வாளர் திரு.சுப்புராயலு அவர்களும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.