
காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் . இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவலர்கள் இவரை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.
தீக்குளிக்க முயற்சிக்க காரணத்தை கேட்டபோது , அவர் கூறியதாவது போலீசார் அவர் மீது அடிக்கடி பொய்யான புகார் சுமத்தி அடிக்கடி காவல்நிலையம் அழைத்து செல்வதாகவும், இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் கூறியுள்ளார். எனவே எனக்கு நியாயம் வேண்டி தீக்குளிக்க முயற்சித்ததாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்தீக்குளிக்க முயற்சித்த நபர் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் சூதாட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
