
தூயபனிமயமாதா பேராலய திருவிழா- பொதுமக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்!!!
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 438-ஆவது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் 10 தினங்கள் திருவிழா நடைபெறும்.
பத்து தினங்களும் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பனிமய அன்னையே வழிபாடு செய்வார்கள் .
இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பங்குத்தந்தை தவிர பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 05:30 மணி அளவில் கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூயபனிமயமாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி
பேராலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் சிறப்பு ஜெபம் செய்து கொடியை ஏற்றினர்.
அப்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் விடுபட சிறப்பு பிரார்த்தனை செய்தனர் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கரகோஷம் எழுப்பி ஏற்றப்படும் இந்த கொடி இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி ஏற்றப்பட்டது.
மேலும் பேராலயம் சுற்றி நான்கு பகுதிகளிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 10-நாட்கள் நடைபெறும் திருவிழாக்களையும் நடைபெறும் திருப்பலி, நற்கருணை பவனி,ஆகியவைகளை வீட்டில் இருந்தபடியே உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்றவைகளில் பக்தர்கள் கண்டுகளித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


