
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை சங்கர் நகர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லாவிற்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வெங்கடேசன், அஜித்,அலெக்ஸ்ராஜ், சத்யா, விக்னேஷ் கிஷோர்,உதயசங்கர் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் நான்கு கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை சிறையிலடைத்துள்ளனர்.