
மதுரை பழங்காநத்தம் அருகே போடி லயன் பழைய காலனி பகுதியில் பிரபல ரவுடியும் கஞ்சா வியாபாரியான
வெள்ளி கண் செந்தில் , முருகன்.
இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் இதே பகுதியில் வசித்து வருகின்றனர் .
அண்ணன் தம்பி இருவரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தத்தனேரி பகுதிக்கு சென்று மீண்டும் இவர் குடியிருக்கும் போடி லயன் பழைய காலனி பகுதிக்கு இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் வந்தனர்.
அப்பகுதியில் இவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மர்ம கும்பல் ஒன்று அண்ணன் தம்பி இருவரையும் ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவல் அறிந்து வந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு பேருக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரனையில் இருவர் மீதும் கொலை கொள்ளை பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும்
மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதோடு கொலையான இருவரும் அந்தப் பகுதியில் பிரபல கஞ்சா வியாபாரியாகவும் இருந்து வந்துள்ளதும்
அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் ,பாலா , சிவகுமார் என்பவருக்கும் இவர்களுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
பரபரப்பான இந்த பகுதியில் இன்று மாலை நடைபெற்ற இரட்டை கொலையினால்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


