
வேட்டைக்கு சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இரண்டு பழங்குடியினர் குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறி உதவிகளை செய்த புரட்சிபாரதம் கட்சியின் ஒன்றியச்செயலாளர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெமிலி பழங்குடி காலனியைச் சேர்ந்த ராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரும் கடந்த 16ம் தேதி இரவு காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றனர். மறுநாள் காலை விடிந்தும் இவர்கள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அருங்குளம் ஓடை அருகே ஒரு பன்றியும் இறந்து கிடந்தது. அதன் அருகே ராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரும் உடல்கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் எலி வேட்டையாட சென்ற இருவரும் விவசாய நிலத்தில் வைத்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் பரிதாபமாக உயிரிழந்த ஆறுமுகம் மற்றும் ராஜா ஆகிய இரண்டு குடும்பத்தினருக்கும் புரட்சி பாரதம் கட்சியின் திருவாலங்காடு ஒன்றியசெயலாளர் D. அருண் ஏற்பாட்டில் கனக்கம்மாச்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திகா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுடைய குடும்பத்திற்க்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.உடன் எழுத்தாளர் சுப்பிரமணி,காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் உடனிருந்தனர்….
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்…


