
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேளையா பிள்ளையூர் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் மற்றும் மகேஷ் ஆகியோரின் தோட்டம் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகுமார் தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள சோளத்தின் மீது மகேஷ் தனது டிராக்டரில் சென்றுள்ளார்..இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் மகேஷ் மற்றும் அவரின் சகோதரரான பிரகாஷ் இருவரும் இணைந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்..இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.ரகுராஜன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டு இரண்டு நபர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.