தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்!!

654

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 21.07.2020 அன்று இரவு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்

சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் முத்துகணேஷ், நம்பிராஜன், ராஜபிரபு,ராஜா, முதல் நிலைக்காவலர்கள் முத்துமணி, கலைவாணர், சுப்பிரமணியன், காவலர் கண்ணன் ஆகியோரின் சிறந்த பணியாற்றியமைக்காகவும்,

இணையதள மோசடிய மூலம் பணத்தை இழந்த பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு

ரூபாய் 57,179/-ஐ கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுதாகரன், காவலர்கள் எடிசன்,புவனேஷ்,ஷாபு, சதீஷ்குமார் ஆகியோரின் சிறந்த பணியாற்றியமைக்காகவும்,

மேற்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் 14 பேரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here