
இதில் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கலந்து கொண்டார். தேனியில் இளைய தலைமுறை நாளிதழின் சார்பாக இளைஞர்கள் எழுச்சி நாயகன் Dr.A. p.j.அப்துல் கலாம் அவர்களின் 5வது நினைவுநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் தேனீ நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் இளைய தலைமுறையின் ஆசிரியர் மற்றும் இயக்குனருமான திரு.M.k .மருததுரை மற்றும் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துராஜ் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் M.K.முத்துராமலிங்கம் மற்றும் இளைய தலைமுறையின் நிருபர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக மக்கள் சேவை செய்த இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் கையால் வழங்கப்பட்டது.

