நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையம் பகுதியில் கொமாரபாளையம் வருவாய் துறையினர், நகராட்சி அலுவலர்கள், டாஸ்மாக் பொது மேலாளர் மற்றும் மது விலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் இணைந்து நடத்திய சோதணையில் நகர பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்பாக கடைகளில் கிருமி நாசினி திரவம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்திருத்தல், கடையில் உள்ள பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருத்தல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்கச் செய்தல் மற்றும் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்காதிருத்தல் போன்ற தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத 12 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சீல் வைத்தும், 2 கடைகளுக்கு அபராதம் விதித்தும் மற்றும் 02 டாஸ்மார்க் கடைகளுக்கு பூட்டும் போடப்பட்டது. கொரோனா தொற்று பரவுதல் தடுத்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைபிடித்து தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியும், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.