
மஞ்சூர் அருகே கிராமந்தோறும் காவலர் திட்டம்,,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எல்லையோர
கிராமமான கின்னகொரை கிராமத்தில
காவல்துறை சார்பில் “கிராமம் தோறும் காவலர்கள் “”என திட்டத்தின் துவக்கி வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு சசி மோகன் அவர்கள் தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் உதகை டி எஸ் பி அருண். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா. ஆகியோர் முன்னிலை வகித்தனர் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் இவர்களை வரவேற்றனர்., இதனைத்தொடர்ந்து எஸ் பி சசிமோகன் கூறுகையில் நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் பொதுமக்கள் அவர்களது குறைகளை தெரிவிக்கவும் தேவையானதை பூர்த்தி செய்யவும் ஓரிடத்தில் இருந்து உடனடியாக மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மிகுந்த சிரமம் பட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள், குறிப்பாக போக்குவரத்து வசதி இல்லாத மாநில எல்லை ஓர சேர்ந்து கிராமமக்கள் அதிக சிரமப்பட்டு வேண்டி உள்ளது,
இதுபோன்ற கிராமங்களை கருத்தில் கொண்டு காவல் துறை உள்பட அரசு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் “கிராமந்தோறும் காவலர் “என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் அவர்கள் தனது வழக்கமான காவல் பணியையும் பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொள்வார்,, கிராமத்தில் சந்தேகம் படும் படி நபர்களின் நடமாட்டம் சமூக விரோத நடவடிக்கைகள் மட்டும் இன்று கிராமத்தின் அரசுத்துறை சார்ந்த பொது தேவைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட காவலரிடம் தெரிவிக்கலாம் மேலும் பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் போன்ற தேவைகளையும் கிராம காவலரே தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம்,, கிராமங்கள் தோறும் நியமிக்கப்படும், இதுதொடர்பாககாவலர்களின் புகைப்படத்துடன் அவரது தொலைபேசி எண் காவல் நிலையம் எண் ஆகியவை கொண்ட பேனர் கிராமத்தின் மையப்பகுதியில் வைக்கப்படும் என தெரிவித்தார் இதை தொடர்ந்து பொதுமக்கள் மருந்து மாத்திரை கபசுர குடிநீர் முகக் கவசங்கள் போன்றவை காவல்துறையினரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது,
